விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் 5 கடை பஜார் பகுதியில் ஒரை சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயம் அடைந்த நபர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர்

5 கடை பஜார் பகுதியில் 15க்கு மேற்பட்ட நபர்கள் கஞ்சா போதையில் தீபாவளி முதல் இன்று வரை தொடர்ந்து பிரச்சினை ஈடுபட்டு வந்ததாகவும் வீடுகளின் கதவுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை கத்தியால் சேதப்படுத்துவது பள்ளிக்கூட செல்லும் குழந்தைகளை தடுத்து நிறுத்தி அவரிடம் பணத்தை பறிப்பது இது போன்ற செயலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது நேற்று இரவு இந்த பகுதியில் பத்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் மூன்று நபர்களை கத்தியால் குத்தியதாகவும் அவர்கள் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வரும் நிலையில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பீவி 6 பேரை கைது செய்து விட்டோம் மீதமுள்ள நபர்களையும் கைது செய்து விடுவோம் என கூறி பேச்சு வார்த்தை ஈடுபட்ட பொழுதும் உடன்பாடு ஏற்படாதநிலையில், சேத்தூர் தளவாய்புரம் இராஜபாளையம் உள்ளிட்ட காவல் நிலைய சேர்ந்த ஆய்வாளர்கள் போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சமாதானம் ஏற்படாத நிலையில் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வானத்தில் ஏற்றி கைது செய்து அழைத்து சென்றனர்.















; ?>)
; ?>)
; ?>)