நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக கொட்டி தீர்த்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் விவசாயிகளின் நெல் மூட்டைகளும் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது. அதனால் விவசாயிகளின் அறுவடை பணிகள் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நேரடி நெல் முதல் நிலையில் தேங்கி இருந்த நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் குறைகளை கேட்டறிந்தார். லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் இயக்குவது தாமதம் அடைந்ததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூட்டைகள் தேக்கமடைந்து மழையால் செய்தமடைந்துள்ளதாகவும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் வயலில் சாய்ந்து முளைக்க தொடங்கி உள்ளதாகவும், ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.