தமிழ் பேரரசு கட்சி மண்டல செயலாளர் முடிமன்னன் , அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது செந்துறை வட்டம் சிறு கடம்பூர் கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் நியாய விலை கடைகள் மூலம் பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

இக்கிராமத்தில் செயல்பட்டு வந்த பழைய நியாய விலை கடை கட்டிடம் இடிந்து சிதலமடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்த காரணத்தால் நியாய விலை கடை தற்சமயம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே சிறுகடம்பூர் நியாயவிலைக் கடை எண்1 க்குகட்டிடம் கட்டித் தர வேண்டுமாய் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுகின்றோம்.
இக்கோரிக்கையினை பரிசினை செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் நன்றி கூறிக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.