தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நேற்று முன் தினம் அறுவடை செய்த நெல்மணிகளை நெல் வயல் களத்திலேயே கொட்டி வைத்துள்ளனர்.

தாறுபாய் போட்டு மூடி உள்ள நிலையில் சுமார் 500 மூட்டைகளுக்கு மேல் உள்ள நிலையில் அது போல் கீழையூர் பாலத்தடியில் சுமார் 300 மூட்டைகளுக்கு மேல் சாலையில் கொட்டி வைத்துள்ளனர் ஆனால் இன்றும் பெய்து வரும் கனமழை மழையால் சுமார் 20 ஏக்கர் அறுவடை செய்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளது மேலும் 40 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய வேண்டிய நெல் மணிகள் மழை நீரில் மூழ்கி அழகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு சென்றாள் மூட்டைக்கு 40 ரூபாய் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் எடுக்கப்படவில்லை அங்கேயே இருக்கிறது பாதி நெல் மூட்டைகளை பிடித்தும் செய்கிறார்கள் பாதி நெல் மூட்டைகளை அங்கேயே வைத்து விடுகிறார்கள் அறுவடை களத்திலேயே நெல் மணிகள் கிடைக்கிறது ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் நடுவாலுக்கு 450 ரூபாய் சம்பளம் இதற்கு மேல் டீ வடை ஒரு குவாட்டர் சரக்கு இவ்வளவு வாங்கி கொடுத்தா தான் வேலை ஆகும் என விவசாயி கண்ணீர் வடிக்கின்றனர்

இதனால் தற்போது அறுவடை நேரத்தில் மழையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு ஏக்கருக்கு சுமார் 30,000 வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் துவங்கி உள்ளதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் அறுவடை செய்து செய்த நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் எனவே வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குறுவைக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உடனடியாக நெல் மணிகள் முளைப்பதற்கு முன் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை பாதுகாப்பாக லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.