தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு’ என்றத் தலைப்பில் ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பாக நடைபெற்றது. முதலில் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கு.க.கவிதா வரவேற்புரை வழங்கினார்.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பெ.பாரதஜோதி தலைமையுரை ஆற்றினார். அடுத்து தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் இ.மாதவன் வாழ்த்துரை வழங்கினார். பின்பு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் பேரா.அழகப்பா மோசஸ் துவக்கவுரை வழங்கினார். தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் இராஜேஷ் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இணைப்பேராசிரியர் ஆனந்த் கருணாகரன் அருங்கானுயிர் காப்பு அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக அத்துறையின் உதவிப்பேராசிரியர் த.ராகேஷ் சர்மா நன்றியுரை வழங்கினார். இப்பயிற்சி பட்டறையில் பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.