• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி..,

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி காேவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்காேவில் கந்த சஷ்டி திருவிழா – 2025 ஆம் ஆண்டு 22.10.2025 முதல் 02.11.2025 வரை நடைபெறுவதை முன்னிட்டு அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். 

அன்னதானம் வழங்க விரும்புவோர் தூத்துக்குடி இணை இயக்குநர் வேளாண்மைத்துறை கட்டிடம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளத்த…இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்றிதல் பெற வேண்டும். 

அதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அன்னதானம் மட்டுமே அளிக்க வேண்டும. அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். 

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப்பாதையிலிருந்து 100மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர் வளாகப் பாதையிலிருந்து 100மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது. 

வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அன்னதானம் வழங்ககூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். 

அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கிட இயலாது. மேலும் போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 0461-2900669, வாட்சப் மூலம் 9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.”