பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து வளரக் கூடியது.
தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை அதிக அளவு சேமித்து வைக்கும் திறன் பெற்றது. மண்ணரிப்பை தடுக்கக்கூடியது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனீர், பனைவெல்லம், பனஞ்சீனி, பனங்கிழங்கு, பனைபழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் மற்றும் பனை ஓலை, பனை நார் என அனைத்தும் பொருட்களும் மக்களுக்கு பயன்படுகிறது.
பனைமரத்தின் முக்கியத்துவம் கருதியும், நமது மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு துறைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 6 கோடி பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திற்கு 6,50,000 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு,
அந்தவகையில் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வைகை அணைப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.