தேனி -அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மந்தைகுளம் கண்மாய் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றும், ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுக்க கோரி குடியிருப்பாளர்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மந்தைக்குளம் கண்மாய் .
கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக இந்த கண்மாயை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த குடும்பங்கள் வசிக்கும் பகுதி கண்மாயின் ஆக்கிரமிப்பு எனக் கூறி, அவர்களை வெளியேறவும், வரும் 22 ஆம் தேதி ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கும் இந்த குடும்பங்களை, மேலாக குடியிருந்து வரும் மக்களை வெளியேற்றும் ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்து நிறுத்தவும் அதே பகுதியில் குடியிருக்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி தேனி ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.