• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில்  மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் இன்று  நடைபெற்றது. கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 436 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் குறைகளையும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.3285 என 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 97 ஆயிரத்து 100 மதிப்பிலான காதொலி கருவிகளையும், தலா ரூ.15 ஆயிரத்து 750 என 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் 72 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 86 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 01 மாற்றுத்திறனாளிக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையினையும் ஆட்சியர் வழங்கினார்.__________

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழரசி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் மற்றும் ஏபிஆர்ஓ முத்துக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் சந்திக்க விடாமல். செய்தியாளர்களை தடுத்து வருவதாகவும். பத்திரிகை யாளர்கள் ஆ குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.”