மதுரை பெருங்குடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு 250 பழங்குடியின குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு வேப்பகுதியில் மாற்று சமுதாயத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று சமுதாயத்தினர் தங்களை அச்சுறுத்துவதாக கூறி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனை தொடர்ந்து இன்று உண்ணாவிரதத்தில் விடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
மதுரை பெருங்குடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் பழங்குடி மரபு கொண்டவர்கள். எங்களுக்கு 2016 இல் இந்த பெருங்குடி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தார்கள். இப்போது வரை எங்களுடைய மக்கள் இங்கு 250 குடும்பம் வசித்து வருகிறோம். திடீரென்று 2023இல் வேறு ஒரு சமுதாயத்திற்கு இங்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் நேற்று எங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
ஆனால் இந்த பகுதி 2016 இல் இருந்து 250 பேர் நாங்கள் இருப்பதால் எந்த அடிப்படையில் வேறு சமூகத்திற்கு இங்கு பட்டா கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு பழங்குடியில் இருப்பதால் வேறு ஒரு சமூகத்தினர் ஒன்றிணைந்து பயணிக்க மாட்டார்கள். இப்பொழுது குடித்திருப்பது விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த பிரமுகர்கள் அப்படி இருக்கும்போது இங்கு ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இரண்டாவது மக்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் இங்கு மக்கள் அச்சப்படுத்துகிறார்கள். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளோம் நேர்முகமாக சந்தித்துள்ளோம் ஆனாலும் இதுவரை எந்த தீர்வு இல்லை. அதனால் இன்று எங்கள் பிரச்சனையை மையப்படுத்துவதற்கு அந்த வீடு சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய சொல்லி நாங்கள் உணவகாரத்திற்கு உட்கார்ந்து இருக்கிறோம்.

எங்களுக்கு சரியான தீர்வு வருவாய்த்துறையும் ஆதிதிராவிடர் நலத்துறை எடுக்கும்வரையும் எங்கள் உண்ணாவிரதத்தை தீர்க்கப் போவதாக இல்லை. அதனால் எங்கள் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை இந்த உண்ணாவிரதம் மூலமாக எங்களுக்கு கண்டிப்பான முறையில் தீர்வு வேண்டும். அதனால் இங்கு ஒட்டுமொத்த மக்களும் ஒருங்கிணைந்து பழங்குடி தமிழர் இயக்கம் சார்பாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
2023ல் ஒரு முறை மனு கொடுத்துள்ளோம், 2024இல் மனு கொடுத்துள்ளோம், 2025 6ஆவது மாதத்தில் மனு கொடுத்துள்ளோம், இன்றைக்கும் ஒரு மனு எங்கள் இயக்கத்தின் சார்பாக கொண்டு போய் கொடுத்துள்ளோம். ஆனால் எதற்கும் எங்களுக்கு தீர்வு இல்லை நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் எடுக்கவில்லை. ஆனால் இரவு நேரங்களில் பட்டா கொடுத்த மாற்று சமூகத்தினர் எங்கள் அச்சம் கொடுத்து வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்கின்றனர். இங்கு ஒரு சுதந்திரம் இல்லை.
இதை நாங்கள் தொடர் உண்ணாவிரதமாக தொடர போகிறோம். எங்களுக்கு இந்த பிரச்சனை ஒரே நாளில் தீர்வதற்கு வாய்ப்பில்லை அதனால் பிரச்சனை தீரும் வரை இந்த உண்ணாவிரதம் நீடிக்கும். உங்களுக்கு 2016 இல் கொடுக்கப்பட்ட பட்டா நடைமுறையாக வேண்டும் இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட பட்டா ரத்து பண்ணனும்