தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சட்டபடி மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச போனஸ் வழங்க வல்யுறுத்தி தொழிலாளாளர்கள் இன்று ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து மாநகராட்சி முன்பு தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இதில் ஏஐசிசிடியூ சங்கத்தின் நிர்வாகிகள் சகாயம், பொன்ராஜ், முருகன், பாலமுருக பெருமாள், கருப்பசாமி, மாணிக்க ராஜ் மற்றும்275 பெண்கள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் சுமார் 100 டன் குப்பைகள் தேங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே அம்பேத்கர் நகர் மற்றும் கதிர்வேல் நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் சுமார் 50 பணியாளர்கள் வேலைக்கு சென்ற வாகனங்களை தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிப்காட் காவல் துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமூகமாக முடிவெடுத்ததில் சில தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.