கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,இளம்புவனத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40-லட்சம் மதிப்பீட்டிலும்,ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.11-லட்சம் மதிப்பீட்டிலும் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி கோவில்பட்டி கிழக்கு ஓன்றிய தேர்தல் பார்வையாளர் சுப்புராஜ் இளம்புவனம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்து குமார்,கணேசன் கிளை செயலாளர்கள் வைரம்,மாடசாமி,சுரேஷ் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி அவைத்தலைவர் சின்னகுருசாமி எட்டயபுரம் பேரூர் வார்டு உறுப்பினர் மணிகண்டன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு முத்துமாரி இளைஞர் அணி மருது பாண்டியன்,செந்தூர் பாண்டியன் மகளிர் அணி சாந்தி,பிரியா ஓன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி எட்டையாபுரம் பேரூர் கழக துணை செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
