கரூர் சம்பவத்தை பொருத்தவரையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உடைய விசாரணை அவசியம் என்ன என்று கேட்கப்பட்டிருக்கிறது.
இதற்கு அரசு பதில் கூற வேண்டும் மேலும் மேற்கூறாய்வை பொறுத்தவரை இரவோடு இரவாக நடந்ததன் காரணம் என்ன அவசியம் என்ன என்பதை வெளிப்படுத்தக்கூடிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.

உண்மை நிலை வெளிவர வேண்டும் நடுநிலையோடு வரும் தீர்ப்பே கட்சிகளுக்கும், மக்களுக்கும், தொண்டர்களுக்கும் வழிகாட்டுதலாக இருக்க முடியும்.
சிபிஐ விசாரணையில் தான் உண்மை வெளி கொண்டுவர முடியும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்து.
இருமல் மருந்து விவகாரத்தில் குழந்தைகளின் இறப்பு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவு. சிபிஐ அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் சோதனைகள் இல்லை என்பது தெரிய வருகிறது.
மருத்துவத்தில் தமிழகத்தின் நிர்வாக திறமைக்கு சீர்குலைவு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்து பல வருடங்களாகவே இந்த நிலை மாறவில்லை அரசாங்கத்தால் இதை முறைப்படுத்தி, சரிபடுத்த முடியவில்லை, முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் மாற்றங்கள் 51% அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது திராவிட மாடல் அரசின் சாதனை. இணையவலி குற்றத்தை பொறுத்த அளவில் 9 மாதங்களில் 1.22 லட்சம் புகார்கள் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை சைபர் க்ரைம் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து.
தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் மக்கள் தங்கள் ஊருக்கு பயணிக்க கூடிய நேரம் எனவே தனியார் ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உயர்ந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய உயரிய நிலையில் தமிழக போக்குவரத்து துறை செயல்பட வேண்டும்.
நெல் கொள்முதல் அவசரம் மற்றும் அவசியமாக உள்ளது. தீபாவளியை விவசாயிகள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றால் இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படை கொள்ளையர்கள் மூலமாக நாகை மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீனவர்கள் அச்சத்தோடு கடலுக்கு வாழ்வாதாரத்திற்கு செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது மத்திய மாநில அரசுகள் இணைந்து இதற்கு முடிவு கட்ட வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு கண்டிப்போடு பேச வேண்டும் என தமாக வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் வெற்றி பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிரச்சாரம் தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றிப் பயணம் இன்று மதுரையில் துவங்குகிறது. அந்தப் பயணம் முழுமையாக வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் உளமாற வாழ்த்துகிறேன்.
பீகாரில் வீட்டுக்கு ஒரு அரசு வேலை அறிவிப்பு குறித்த கேள்விக்கு:. பீகாரைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மாநிலங்களுக்கு இணையாக பல மடங்கு பல துறைகளில் உயர்ந்து இருப்பதற்கு காரணம் அங்கு பாஜக, முதல்வர் நித்திஷ் கட்சி இணைந்து ஆட்சி செய்கிறது. மத்திய அரசின் ஒத்த கருத்துள்ள ஆட்சி. மத்திய மாநில திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறது. எதிர்பார்ப்புக்கு மேல் பீகார் என்று வளர்ந்து உயர்ந்து நிற்கிறது.
இத்தகைய நல்ல சூழலில் பீகாரின் வளர்ச்சி தடைபடாமல் இருக்க மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி என்னுடைய வெற்றியை பீகார் வாக்காளர்கள் உறுதிப்படுத்தக்கூடிய சூழலில் இருக்கும்போது வாக்காளர்களை திமுகவினுடைய வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதை போல அதே பாணியை தேஜஸ் பி கடைப்பிடிக்க நினைக்கிறார்கள் அது ஒருபோதும் எடுபடாது பீகார் மக்கள் விழித்துக் கொள்வார்கள் தமிழக மக்களைப் போல் மீண்டும் அவர்கள் ஆட்சியாளர்களிடம் ஏமாற தயாராக இல்லை என்பது போல மீண்டும் இந்தியா கூட்டணிக்கு அவர்கள் வாக்களிக்க தயாராக இல்லை.
ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷன் குறித்த கேள்விக்கு:
அன்னைக்கு இருந்த ஆட்சி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. எனவே அதில் இன்னும் ஆழமான கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த கேள்விக்கு:

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது படிப்படியாக நாட்டினுடைய உயர்வுக்காக மத்திய அரசு எடுத்த முடிவு. மேலும் ஜிஎஸ்டி வரிக்குழு என்பது அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்ற நிதி அமைச்சர்கள் பங்கு கொள்கின்ற குழு. தொடர்ந்து எல்லா வருடமும் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படிப்படியாக ஆலோசித்து உரிய நேரத்தில் சரியான முறையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி குறைவினால் மக்களுடைய சுமை மட்டும் குறையவில்லை, மாறாக மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு சேமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை நிலை. இன்னும் சொல்லப்போனால் இந்த அரசு பொருளாதார ரீதியாக கொரோனா காலகட்டத்தில் வளர்ந்த நாடுகள் செய்ய முடியாத சாதனையை என்டிஏ அரசு செய்திருக்கிறது. 80 கோடி மக்களுக்கு உணவளித்து நாட்டைக் காப்பாற்றிய அரசு என்டிஏ அரசு. பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு படிப்படியாக இலகுவான முறையை ஏற்படுத்தி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்குவது குறித்த கேள்விக்கு:
மாநிலங்களுக்கு ஏற்றவாறு அதற்கு பயன் தரும் வகையில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் பயனாளிகளின் விருப்பமாக உள்ளது. மக்களின் விருப்பமும் அதுதான். மக்களின் வரிப்பணம் வீணாகாமல் ஊழலில் சிக்கி தவிக்க கூடாது.
காசா விவகாரம் குறித்த கேள்விக்கு:
முதலில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதை செய்ய தவறிய ஆட்சியாளர்களால் இந்த கேள்வி எழப்படுகிறது இல்லையென்றால் இந்த கேள்வி எழப்படாது நாட்டு மக்கள் மீது அக்கறையோடு பரிதாபம் காட்டுவது எந்தவித தவறும் இல்லை. இலங்கைக்கும் நேபாளுக்கும் பங்களாதேஷுக்கும் பாதிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா உதவி இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார்கள் ஆனால் தமிழகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மக்களுக்கு நிறைவேற்றாமல் அதை மூடி மறைக்க திசை திருப்ப உலகளாவிய செய்திகளுக்கு திமுக செல்வது தமிழக மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. இனிமேல் ஒருபோதும் தமிழக மக்கள் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை.
திருமாவளவன் குறித்த கேள்விக்கு:
தலைவராக இருந்தாலும் சரி தொண்டராக இருந்தாலும் சரி சாதாரண தொண்டனாக இருந்தாலும் சரி சட்டம் அனைவருக்கும் பொதுவானது .
சட்டம் தன்னுடைய கடமையை முறையே சரியே செய்ய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பமாக இருக்கப்படுகிறது இருக்க முடியும் என.G.K.வாசன் கூறினார்.