தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி ரூ.19.74 கோடி மதிப்பில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகளை அமைச்சர் மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டம் இயற்கை அமைப்பில் மேடு,பள்ளம் கொண்ட சாலைகளின் தன்மை கொண்ட பகுதியில் பயணிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சிவசங்கர் வழிகாட்டுதல்படி. குமரி மாவட்டத்திற்கு முதல் கட்டம்.ரூ.19.74
கோடி மதிப்பிலான 21 தாழ்தள சொகுசு பேருந்துகளின் இயக்கம் நிகழ்வு
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நடந்த நிகழ்வில்.

நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன்,
குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜான், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ்,குமரி ஆட்சியர் அழகு மீனா மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

இந்த நிகழ்விற்கு பின் அமைச்சர் மனோதங்கராஜ் புதிய பேருந்துகளை
பச்சை கொடி அசைத்து புதிய சொகுசு தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.