மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மத்தம் மேலநாடு 55 நிர் கல்லம்பட்டி கழுவும்பாறை சுவாமி கோவில் மாடு நினைவாக கல்லம்பட்டி கழுவும்பாறை வீரர்கள், அம்பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாபெரும் இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை சிவகங்கை ராம்நாடு தேனி திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் வரவழைக்கப்பட்டன.
வீரர்கள் குழுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆக்ரோஷமாக விளையாடிய காளைகளை அடக்கினர்.
சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் வீரர்களுக்கும் ரொக்கப் பரிசும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு பரிசாக அனைவருக்கும் குத்துவிளக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லம்பட்டி கழுவம்ப்பாறை சுவாமி குழு மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.