மதுரை மாநகரில் நாளுக்கு நாள் விபத்துக்கள் பெருகிவரும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் எவ்வளவு அறிவுறுத்தியும் ஒரு சிலரால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் குறித்து மதுரை சேர்ந்த தனியார் வானொலி சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவலர் இணைந்து முறையாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன போட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இதில் மதுரை மாநகர திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி சார்பு ஆய்வாளர் சந்தான குமார் மற்றும் தனியார் வானொலி மேலாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகளை கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கூறுகையில் மிதமான வேகத்தில் வாகன வாகனத்தை இயக்கி தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்கும் பொழுது நாம் விபத்தில் இருந்து பெரும் அளவு காயத்திலிருந்து தப்பிவிடலாம்.

மேலும் மது போதையில் வாகனத்தை இயக்கும் பொழுது தன் மட்டும் பாதிப்பது இல்லாமல் எதை வரும் வாகனத்தின் மீது மோதி அவர்கள் குடும்பத்தில் சீரழிக்கும் நிலையில் ஏற்படுகிறது. இதனால் மது அருந்தி எக்காரணக் கொண்டும் வாகனத்தை இயக்காதீர்கள் எனவும் தெரிவித்தார். தங்கள் குடும்பத்தை நினைத்து மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கி தங்கள் குடும்பத்தையும் எதிரில் வரும் வாகனம் ஓட்டி வரும் குடும்பத்தையும் நினைத்து வாகனங்களை இயக்க வேண்டும்.
மதுரை மாநகரில் விபத்தில்லா வாகன மாநகரமாக மாற்றி விபத்துல்லா மாநகரம் மதுரை மாநகரம் முதல் மாநகரமாக வர பொதுமக்கள் நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
