பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் பேரியக்கம் நாடு முழுவதும் நடத்தி வரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் தலைமையில் இன்று பேயோடு ஜங்ஷனில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் MP சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றத் காங்கிரஸ் கட்சி தலைவரும், கையெழுத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பொது குழு உறுப்பினர் யூசுப்கான், உட்பட காங்கிரஸ் மாநில மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக அப்பகுதியில் உள்ள கடைகளில் கையெழுத்து பெறப்பட்டது.