இன்று சர்வதேச இடம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் புலம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது-350 க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த பறவைகள் கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்டன.புத்தளம் சதுப்பு நிலத்திற்கு வருகை தந்த ஆர்க்டிக் டெர்ன், தகைவிலான்கள், வாலாட்டிகள், வானம்பாடிகள் மற்றும் நெட்டைக் காலிகள் உள்ளிட்ட பல்வேறு வகை புலம்பெயர்ந்த பறவை இனங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பறவை ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன், குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் பணியாளர்கள்,இவர்களுடன் பள்ளி மாணவர்களும் புத்தளம் பகுதியில் கூட்டம் கூட்டமாக கூடி வாழும் பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டு மகிழ்ந்தார்கள்.