இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

நம் கரூர் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றான தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவில் புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, அதன் பிறகு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
