கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நடிகர் விஜயின் நிகழ்வில் கூட்டத்தில் சிக்கி 41பேர் இறந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 50,000 நிதி வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தவெக தரப்பினர் எஸ் ஐ டி விசாரணை தேவையில்லை CBI விசாரணை வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர் என்ற கேள்விக்கு?
அவர்கள் எந்த அடிப்படையில் இந்த கோரிக்கை வைத்தார்கள் என்று தெரியவில்லை மெர்சல் சாவு என்று எல்லோரும் சொல்லக்கூடிய நிலையில் நெரிசலால் ஏற்பட்ட சாவு இல்லை புறநிலை தூண்டுதலால் நேர்ந்த சாவு என்று கருதுவதாக தெரிகிறது அதனால் தான் இது திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனம் உள்ளது அதிக விடுதலை சிறுத்தைகளும் வைத்தோம்.
பல்வேறு நிகழ்வில் நடந்திருக்கிறது மகாமக நிகழ்வில், கும்பமேளா நிகழ்விலும், ஆந்திராவில் அல்லுஅர்ஜுன் அவர் படம் பார்க்க போன பொழுது இதுபோல சம்பவம் நடைபெற்றுள்ளது.
கூடுதலான மக்கள் திரண்டு வருகிற போது எண்ணிக்கை அதிகரிக்கும் நெரிசலில் ஏற்படுகின்ற துயரம் இது அவர் எந்த கோணத்தில் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் எதற்காக சிபிஐ கோரிக்கை வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
விஜய் கரூர் சென்றால் அவர் கொல்ல வாய்ப்பு இருக்கிறது என பாஜக தலைவர் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு
இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை பேசுகிறது அவருக்கு வாடிக்கையாக உள்ளது கற்பனையாகவும் யூகமாகவும் பல செய்திகளை பரப்புகிறார்.
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்கு யாருக்கும் மாற்று கருத்தில்லை. சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் குறியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலைவராக நைனார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன.
ஆனால் இன்னும் அண்ணாமலையே தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்
விஜய் அவர்களுக்கு இந்த என் ஆபத்து ஏற்படுகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மக்கள் செல்வாக்கோடு இருக்கக்கூடிய தலைவராக இருக்கக்கூடிய சூழலில் அவருடைய உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சூழல்
அங்கு அவருக்கு என்ன நிலவுகிறது என்பதை அண்ணாமலை தான் விளக்க வேண்டும்
நெரிசல் சாவுக்கு பின்பு ஏற்பட்ட அனுபவம், படிப்பினை ஒரு கோரிக்கை வைப்பது ஒன்று தவறில்லை.
சென்னை நீதிமன்றம் எப்படி விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு?
அண்மைக்காலமாக குறிப்பிட்ட இடம் மாறி விசாரிக்கிற நிலையை நாம் பார்க்கிறோம்.
நீதித்துறையில் இது போன்ற நடவடிக்கைகள் எந்த பின்னணியில் நடக்கின்றன சட்டபூர்வமாக இவை நிகழ்கின்றதா என்பது தெரியவில்லை. இந்த கேள்விக்கு நீதிபதிகள் தான் கூறிய பதில் தர வேண்டும்.
அதிமுக, தவேக கூட்டணி ஏற்பட்டால் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு
இது யூகமான கேள்வி அதிமுக தரப்பில் பரப்பப்படுகிற ஒரு வதந்தி
அவர்கள் ஏற்கனவே பிஜேபியுடன் கூட்டணி இருக்கும்போது தவெக எப்படி வரும் என்று கேள்வி எழுகிறது. பாஜக எங்கள் கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருக்கிறார் அப்படி என்றால் பாஜக, அதிமுக, தவெக கூட்டணி இருக்குமா பாஜகவை கழட்டிவிட்டு அதிமுக வெளியேறத் தயாராக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதிமுகதலைமை கூட்டணிக்கு கூட நம்பகத்தன்மை உடைய ஒரு கட்சியாய் என கேள்வி இயல்பாக எழுகிறது.
எடப்பாடி விஜய் சந்தித்ததாக கூறப்படுகிறது அதில் யூகம் தான். சந்தித்த பின்பு பேசலாம்.
சென்னையில் வாகனம் மோதியதில் பிஜேபியின் தலையீடு உள்ளது அவர்கள் சதி இருப்பதாக கூறி உள்ளீர்கள் என்ற கேள்விக்கு?
அண்ணாமலை முந்திரிக்கொட்டை தனமாக வந்து விமர்சனம் செய்தது,
எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய சொன்னது உள்நோக்கம் கொண்டது.
இருசக்கர வாகனம் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரம் இல்லை.
வீடியோ வெளியிட்டிருக்கும் அண்ணாமலைக்கும், இந்த விபத்திற்கும் தொடர்பு உண்டு
என்னுடைய காருக்கு முன்பாக ஒருவன் தான் எடுத்து இருக்க வேண்டும்.
அண்ணாமலை வண்டி மோதவில்லை என்ற பின்பு எந்த புலனாய்வு அறிக்கையைப் பெற்றார்
உடனடியாக தனியார் தொலைக்காட்சி அனுப்பப்பட்டிருக்கின்ற ஐந்து நிமிடத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு எப்படி அந்த வீடியோ கிடைத்தது.
உடனடியாக அண்ணாமலை மட்டும் செய்தி எப்படி தெரிகிறது.
ஒரு மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் இதை கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
விசாரித்த வகையில் பின்னாடி பிஜேபி உள்ளது நாங்கள் விசாரித்த வகையில் திருமாவளவன் அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு வருகிறார். அந்த பிரச்சினை பண்ண வேண்டும் என்று ஏற்கனவே அங்குள்ள வழக்கறிஞருக்கு தெரிவித்துள்ளார் என்பது தெரிகிறது. இது திட்டமிட்டு ஒன்று இது குறித்து முதல்வரிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இது என்னுடைய பாதுகாப்பின் விஷயமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் தான் உடனடியாக சாதி அமைப்புகள் இறங்கி வேலை செய்கிறார்கள். இந்த சமூக பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தனியார் தொலைக்காட்சி அண்ணாமலை உதவி செய்கிறது.
நான் சாதி எதிராக நாம் எப்படி செயல்படுத்த முடியும்.
வண்டியில் மோதியதற்கு
ஆதாரம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
வண்டி மோதியது என எப்படி அந்த தொலைக்காட்சி முடிவுக்கு வருகிறது.
அடங்கமறு என்ற முழக்கம் வேறு அதை நான் 35 வருடமாக சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒடுங்கி கிடக்காதீர்கள் என்று சொல்வது அது அரசியல் முழக்கம் சாதிக்கு எதிராக கிடையாது என தெரிவித்தார்.