தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டிலும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இருக்கிறார்கள்.
இவர்களில் சீனியர் அமைச்சர்கள் என்று சொல்லத்தக்க வகையில் அமைச்சர் நேருவும், புதுக்கோட்டையில் அமைச்சர் எஸ் ரகுபதி இருக்கிறார்கள். அதே போல் அவர்களுக்கு இணையாக மட்டுமல்ல அவர்களை விட அதிகமாக சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய துறைகளில் மற்றும் சுறுசுறுப்பாகவே எல்லா தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்றால் ஒருவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்னொருவர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் ஆவர்.
இந்த இரண்டு அமைச்சர்களுமே தலைமையிடத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற அமைச்சர்களாக இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் அல்லது தமிழ்நாடு அரசின் சாதனைகளையும் பொதுமக்களுக்கு வெளியில் கொண்டு சென்று பேசத்தக்க வகையில் இரண்டு அமைச்சர்களுமே இருந்து வருகிறார்கள்.


இது ஒரு புறம் இருந்தாலும் அமைச்சர்கள் என்ற வகையில் கூடுதல் பொறுப்பை மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைச்சராகவும் செயலாற்றி வருபவர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆவார்.
இவருக்கு பிரச்சனை வருகிறது என்றால் சொந்த கட்சியைக் காட்டிலும், எதிர்க்கட்சிகளில் இருந்தும் வருவதுண்டு. அதேபோல் சொந்த கட்சியிலேயே அவரை பிரிவினை படுத்தி பார்க்கக்கூடிய அளவிற்கு திமுகவினரே இருப்பதும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்குத் தெரிய வந்திருக்கிறது.
இப்படி பலராலும் உற்று நோக்கி வரும் பார்வை இருந்து வரும் நிலையில் 9.10.2025 அன்று மெய்யநாதனுக்குப் பிறந்தநாள் வருகிறது என்பதை அறிந்த கட்சியினர் யாருக்கும் தெரியாமல் ஆங்காங்கே பிறந்தநாள் விழாக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டனர். அவர் திண்டுக்கல்லுக்கு சென்று உதயநிதியை சந்தித்து விட்டு வரும் வழியில் புதுக்கோட்டையை அடுத்த கேப்பறை என்ற இடத்தில் பரிமளம் என்பவர் சாலையோர மிகப் பெரிய பதாகை ஒன்றை வைத்து அங்கேயே பிறந்தநாள் கேக்கை ஏற்பாடு செய்து வழியில் வந்த அமைச்சரை வழிமறித்து கேக்வெட்டச் செய்து அசத்தி விட்டார்.
அதேபோல் அவர் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் அவர் வருகிறார் என்று தெரிந்து அனைத்து இடங்களிலும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் இரவு நேரத்தில் கூட அவர் வந்து தங்குவதாகவும், தொண்டர்களை சந்திப்பதாகவும் இருந்த ரோஸ் லேண்ட் என்று சொல்லக்கூடிய அரசு விருந்தினர் மாளிகையில் அவரது உருவப்படம் பதிவு செய்யப்பட்ட கேக் ஒன்றை வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். அதனை அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தனர். இதெல்லாம் என்ன நடக்கிறது என்று பார்த்தால் அவரது பிறந்த நாளை அவரது தொகுதியான ஆலங்குடிக்கு மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்திருக்கிறார்கள் திமுக தொண்டர்கள். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் சென்று வாழ்த்துக்களை பெற்றதுடன் தொகுதிக்கு காலை நேரத்திலேயே வந்து விட்டார். வந்த நேரத்திலும் தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நூல்களும், பயனடைகளும் அணிவித்து அவரை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு இன்னொரு சிறப்பு காரணமும் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு முதலமைச்சர் சொந்த தொகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுப்பு அமைச்சராக இருந்து அவர் அங்குள்ள மக்களுக்கு எந்த குறையும் இல்லாத வண்ணம் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் கொண்டு சென்று சேர பாடுபட்டு இருக்கிறார். மேலும், அதற்காக அங்கு அமைச்சராகவும், பொறுப்பு அமைச்சராகவும் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும் விதமாகவும், சிறப்பாக செயலாற்றி வந்திருப்பதால் அந்த தொண்டர்களும் இவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.