நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு தனலெட்சுமி. இவர்கள் தலைமுறை தலைமுறையாக தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள திருக்குவளை கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் கூரை வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் தற்போது ஆதினம் அனுமதியோடு புதிதாக மாடி வீடும் கட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பழனியப்பன் அவர்கள் பயன்பாட்டீல் உள்ள இடத்தில் குளத்திற்கு செல்ல பொது பாதை வேண்டும் என கேட்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர்களின் பயன்பாட்டில் உள்ள இடத்தில் 90 குழி இடத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தை பொது பாதைக்கு எடுத்துக் கொள்ள தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறையினர் கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டவன் தலைமையில் போலிசார் பாதுகாப்போடு இடத்தை அளந்து கூரை வீட்டை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரத்தோடு வருகை தந்தனர். கூரை வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது அவர்களை வீட்டுக்குள் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வீட்டை இடிக்க முற்பட்ட போது ஜேசிபி இயந்திரத்தை மறைத்து கட்டிபிடித்தபடி கூச்சல் போட்டு இடிக்க விடாமல் தடுதததால் பரபரப்பு ஏற்பட்டது.