போதை பொருட்களுக்கான எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார்.

இளம் தலைமுறை மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக கவல்துறையினருடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்…
இதன் ஒரு பகுதியாக போதை பழக்கத்திற்கு விடை கொடுப்போம் போதை இல்லா நகரத்தை உருவாக்குவோம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்றது.
துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியை துடியலூர் போக்குவரத்து துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் வி.சி.எஸ்.எம்.பள்ளி முதல்வர் ஹெரால் சாம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்..

துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியில் கிரீன் பீல்டு வளாக பள்ளி மணவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக பேசிய பள்ளி முதல்வர் ஹெரால் சாம் ,தமிழகத்தில் போதை பழக்கத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையும், அரசும் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்கள் கல்வி பயிலும் போது நல்ல ஒழுக்கத்துடனும், கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்..