கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்து உள்ள 24 வீரபாண்டி கிராமத்திற்கு உட்பட்ட சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தில் யானைகள் கூட்டமாக வந்து வனப்பகுதி ஒட்டி வனத்துறையினர் தொட்டியில் நிரப்பி உள்ள தண்ணீரை அருந்தும் காட்சியை அங்கு இருந்த ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பதிவு வருகிறது.மேலும் வனப்பகுதியில் வறச்சி போக்க அதிக அளவில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.