விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஸ்வ நத்தம் கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நாய் தத்தளிப்பதாக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் பாழடைந்த கிணற்றுள் இறங்கி தத்தளித்து நாயை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்