• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

ByM.S.karthik

Oct 9, 2025

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் துவரிமான் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை மதுரை மேற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில் துவரிமான் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்து கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் மணி அழகு பாண்டி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் ஊராட்சி செயலாளர்கள் ராஜேந்திரன் விஜயபாஸ்கர் கண்ணன் ராஜா உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்