காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், காரைக்கால் ஓஎன்ஜிசி காவிரி படுக்கை சார்பில் சமூகப் பொறுப்புத் திட்டமாக நிறுவப்பட்ட ₹9 லட்சம் மதிப்புள்ள மேம்பட்ட ஆர்.ஓ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில்

நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு தலைமை விருந்தினராக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை வகித்தார்கள்.கல்லூரி முதல்வர் வேலாயுதம் முன்னிலை வகித்தார்.
ஓஎன்ஜிசி காவிரி படுக்கை சமூகப் பொறுப்புத் திட்டம் – பொறுப்பு

தங்கமணி அவர்கள் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றி ஓஎன்ஜிசி நிறுவனம் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் சமூக நலத்திட்டங்களுக்கும் தொடர்ந்து பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார். ஓஎன்ஜிசி காரைக்கால் காவிரி படுகை தலைமை – மனிதவளம் டாக்டர் கிரிராஜ் திமான் அவர்கள், “மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சுத்தமான குடிநீர் வழங்குவது முக்கியமான அடிப்படை வசதி” எனச் கூறினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்ட ₹9 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு ஏ.எஸ்.பி.எஸ் ரவி பிரகாஷ் அவர்கள், ஓஎன்ஜிசி காரைக்கால் அசெட் மேலாளர் உதய் பஸ்வான் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் குடிநீரை அருந்தி சிறப்பு செய்தனர்.
நிகழ்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், அவர்கள் பேசியதாவது:-

சமூகப் பொறுப்புத் திட்டங்கள் கல்வி நிலையங்களுக்கு தரும் பயன்களை விளக்கி, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சேவையைப் பாராட்டினார். மேலும் கல்லூரி வளாகத்தில் போதை பொருள்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும், போதை பொருட்களில் இல்லாத மாவட்டமாகவும் கல்லூரி ஆகவும் பாலிடெக்னிக் கல்லூரி விளங்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியதுடன் போதை பொருட்கள் உபயோகம் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் கல்லூரிக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் இது போன்ற போதை பொருட்கள் உபயோகம் குறித்து தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை மூலம் கடிமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்கால் ஓஎன்ஜிசி அசெட் மேலாளர் உதய் பஸ்வான் அவர்கள் கலந்து கொண்டு, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ONGC தொடர்ந்து பங்களிப்புச் செய்யும் என தெரிவித்தார்.
பின்னர் நிகழ்சியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் திருமதி லட்சுமி அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ONGC அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த முயற்சி மூலம் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திர வித்யாலயா மத்திய பள்ளியில் காரைக்கால் ஓஎன்ஜிசி சார்பில் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை காரைக்கால் சார்பு ஆட்சியர் செல்வி பூஜா ஐ.ஏ.எஸ் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காரைக்கால் ஓஎன்ஜிசி அசெட் மேலாளர் உதய் பஸ்வான் அவர்கள்,ஓஎன்ஜிசி காவிரி படுக்கை சமூகப் பொறுப்புத் திட்டம் – பொறுப்பு தங்கமணி அவர்கள் , காரைக்கால் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ரங்கசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.