• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தி.மு.க அமைச்சர்களை பார்த்த அ.தி.மு.க வினர் எடப்பாடியார் வாழ்க என கோஷம்..,

BySeenu

Oct 8, 2025

கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை நாமக்கல்லில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அப்பொழுது அவர்களை வரவேற்க அ.தி.மு.க வினர் கோவை விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர்.

அப்பொழுது நாளை தமிழக முதல்வர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மற்றும் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பரசன் காந்தி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.

அமைச்சர்களை பார்த்த அ.தி.மு.க வினர் எடப்பாடி யார் வாழ்க, அ.தி.மு.க வாழ்க, கோவை கோட்டை எங்களது என்று கோஷம் எழுப்பினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.