கோவை, அவிநாசி சாலையில் ரூபாய் 1,791 கோடியில் கட்டப்பட்ட 10.10 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை நாளை தமிழகம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அந்தப் உயர்மட்ட மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது:

கோவைக்கு நாளை வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் நிகழ்ச்சியாக கொடிசியாவில் நடைபெற உள்ள அமைச்சர் அன்பரசன் ஏற்பாட்டில் உலகளாவிய தொடக்க நிலை உச்சி மாநாடு கலந்து கொள்ள உள்ளதாகவும், இரண்டாவது நிகழ்ச்சியாக கோவை மட்டுமல்லாது தென்னக மக்களே எதிர்பார்த்த தமிழக முதல்வர் மக்களின் மனதை புரிந்து கொண்டு, தமிழகத்தில் உள்ள பொறியாளர்கள், இளைஞர்கள், விஞ்ஞானிகள் பாராட்டுகின்ற அளவிற்கு கோவையில் அமைய உள்ள இந்தப் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது.

மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது மக்கள் இந்த பாலத்திற்கு ஜி.டி நாயுடு பெயர் வைத்ததற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்ததாகவும் கூறியவர், நாளை காலை 10:30 மணி அளவில் தமிழக முதல்வர் திறந்து வைத்து அந்தப் பாலத்தின் மேல் பவானி செல்ல உள்ளதாகவும், பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். இது மத்திய அரசு நிதி கிடையாது, முழுவதும் மாநில அரசு நிதியில் இருந்து கட்டப்பட்டது என்று கூறிச் சென்றார்.
