கோவை காந்திபுரம் 100 சாலையில் புதிய ராம்ராஜ் காட்டன் ஷோரூமை ரிப்பன் வெட்டி கல்வியாளர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர் நாகராஜன்,இணை நிர்வாக இயக்குனர் எஸ்.அஸ்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கல்வியாளர் டாக்டர் பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர்,ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர் நாகராஜன்,எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள ராம்ராஜ் ஷோரூமீல் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆடைகளை வாங்கி முதல் விற்பனை துவங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களும் பெற்றுக் கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட ஷோரூமில் வெள்ளை வேட்டிகள்,சட்டைகள் முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான புதிய ஆடைகள் வரை ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.