கோவை, வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 7 மாத கால ஊதிய நிலுவை தொகை மற்றும் தீபாவளி முன்பணம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானம்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 26.8.2025 அன்று பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர்களுக்கு சட்டப்படி, நியாயமான 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி பதிவாளருக்கு கடிதம் கொடுத்ததாகவும், அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார் என்றும், 26.9.25 அன்று ஏழு மாத நிலுவைத் தொகை மற்றும் பல்கலைக் கழகத்தின் நிதி குழு மற்றும் ஆட்சி குழு அன்றைய உயர் கல்வித் துறை செயலாளர் ஒப்புதல் அளித்தும், பொங்கல் சிறப்பு நிதி ஊதியம் ஆயிரம் கொடுக்காமல், கேவலமாக வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்தவர்கள், இது குறித்து துணைவேந்தர், பதிவாளரிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்றும், தொடர்ந்து தொழிலாளர் விரோத செயலை இந்த பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், இது குறித்து தொழிற்சங்கம் பலமுறை பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், குறிப்பாக இப்பொழுது முழு நேர பதிவாளர் ராஜவேல் அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பேசும்போது 6.10.2025 திங்கட்கிழமைக்குள் உங்களது முக்கிய கோரிக்கையான பொங்கல் ஊதியம், நிலுவைத் தொகை, தீபாவளி முன்பணம் ஆகிய நியாயமான கோரிக்கைகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதை நம்பி தொழிலாளர்களும் காத்து இருந்ததாகவும், இன்று வந்த சுற்று அறிக்கையில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ரூபாய் 20,000 தீபாவளி பண்டிகை முன்பணம் கொடுக்கப்படும் என்றும், அதனை பல்கலைக் கழகம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனுப்புங்கள் என்றும், வருகிற 13.10.2025 தேதிக்குள் அனுப்புமாறு சுற்று அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இது தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும், தொழிலாளர்கள் முறைப்படி பதிவாளரிடம் கடிதம் கொடுத்தும் அவர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு சான்று என்றவர்கள், இன்று பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினரிடம் பேசிய போது நிதி இல்லை எப்படி ? கொடுக்க முடியும் என்று அலட்சியமாக கூறியதாகவும், அதற்கு அவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் 20,000 சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால், எப்படி ? நிரந்தர தொழிலாளர்களுக்கு கொடுக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பியதாக தெரிவித்தவர்கள்,
அதற்கு பொறுப்பு துணை பதிவாளர் எனக்கு ஒன்றும் தெரியாது செயலாளருக்கு மட்டும் தான் தெரியும் என்றும், அவர் தான் அதற்கு பொறுப்பு என்றும் தெரிவித்தாகதாக கூறிய ஒப்பந்த தொழிலாளர்கள்,
பாரதியார் பல்கலைக் கழகம் எப்படியாவது ? தமிழக முதல்வரை நல்லாட்சிக்கு கெட்ட பெயரை வாங்க கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பதாக நிதி அலுவலக அலுவலர்கள் தமிழக அரசு வழங்கக் அரசாணை பிறப்பித்தும், அதனை படிக்காமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
அவர்கள், எதற்கெடுத்தாலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் நிதி இல்லை, என்று கூறும் அவர்கள் அவர்களுக்கு மட்டும் எப்படி ? நிதி உள்ளது என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பினர்.
இது பல்கலைக் கழகமா ? அல்லது தொழிலாளருக்கு விரோதம் செய்யும் கழகமா ? சந்தேகம் எழுவதாக கூறியவர்கள், தொழிலாளர்களின் சட்டப்படி, நியாயப்படியான கோரிக்கையை வலியுறுத்தி அவசர பொதுக்குழுவில் முடிவு செய்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று உள்ளிருப்பு போராட்டம் ஈடுபடுவது போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தனர்.