குமரி மாவட்டத்தின் தனித்த ஒரு பெருமை எழுத்தறிவு பெற்ற மக்களை அதிகமாக கொண்ட மாவட்டம் மதம், இனம் கடந்து அனைவரும் ஒரே குடும்பம் என்று வாழ்ந்த மக்களை இருகூறாக பிரித்தது,ஒரு கலவரத்திற்கு காரணம் ஆனது ‘மண்டைக்காடு’
சம்பவம்.

தொலைத்து போன ஒற்றுமையை மீண்டும் உருவாக்க. அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார், அன்றைய குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி,
சாமிதோப்பு பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் குமார்,நாகர்கோவிலை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அகமத்கான் இணைந்து. குமரி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, அன்றைய மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட, திருவருட்பேரவையின்,இன்றைய அகவை 43.,, இன்னும் 7ஆண்டுகளில் அகவை 50_ தொட்டுவிடும் நிலையில்,

அன்று மக்கள் மத்தியில் ஒற்றுமை யை ஏற்படுத்திய திருவருட்பேரவை, குமரி மாவட்டத்தில் இன்றும் 10_ பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில்.
கன்னியாகுமரியில் இன்று(அக்டோபர்_7)ம் நாள் ஆன்மீக தோட்டத்தில். கன்னியாகுமரியின் புதிய ‘கிளை’ தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சாமிதோப்பு அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர்.டானியல், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆன்மீக தோட்டத்தின் நெறியாளர் அருட்பணி. ஜான்டெமாசின் பங்கேற்று வாழ்த்தி
கன்னியாகுமரி திருவருட்பேரவையின் புதிய கிளை அதிகார பூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள் ஜான்சன், இக்னேஷியஸ் பிரிட் டோ,புஷ்பராஜ் மற்றும் எழுத்தாளர், கவிஞர் திருமதி. ஜீடிகுரூஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் சாந்திகரி ஆஸ்ரமத்தின் கன்னியாகுமரி தலைமை பொறுப்பாளர் சுவாமி பங்கேற்று வாழ்த்தினார்.