தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு வர்த்தக சங்கங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றிய ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்ததாவது

எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு உரிய அனுமதி பெற்ற வெடிக்கடைகள் மட்டுமே வெடி விற்பனை செய்ய வேண்டும் மேலும் கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் துப்பாக்கி பொட்டு வெடி உள்ளிட்ட அனைத்து வெடிகளும் விற்பனை செய்வதற்கு உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் மேலும் அனுமதி இன்றி வெடி விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து கடைகள் சீல் வைக்கப்படும்.
மேலும் துணிக்கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பல்வேறு தரப்பில் செயல்பட்டு வரும் கடைகளில் தங்கள் கடையில் பொருட்கள் வாங்கினால் பட்டாசு இலவசம் என விளம்பரம் செய்தாலோ மேலும் அனுமதி இன்றி வெடிகள் வைத்திருந்தாலும் அந்த கடைகளும் மூடப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் மேலும் தள்ளு வண்டிகளில் பட்டாசுகள் வித்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அது மட்டும் இன்றி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெடிக்கடைகள் நடத்தும் பொழுது அருகில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு இடர்பாடும் இருக்கக் கூடாது மேலும் போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது விடியல் விற்கும் கடைகளில் கட்டாயமாக தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் ஏதும் வைத்திருக்கக் கூடாது தீய கட்டுப்படுத்துவதற்கான உரிய ஆவணங்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் மொழி பெருக்கிகள் மூலம் விளம்பரங்கள் செய்பவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் இடம் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் உரிய லைசென்ஸ் அனுமதி சீட்டு வண்டிக்கான ஆர்சி புக் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும் இவை அனைத்தும் இல்லாமல் ஒலிபெருக்க விளம்பரம் செய்தால் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பாப்பாநாட ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில்
தரைக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்.

மேலும் பேரூராட்சி நிர்வாகம் போக்குவரத்து இடையூறாக தரைக் கடகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதை தடுக்க வேண்டும் அவ்வாறு அனுமதி வழங்கினால் அதற்கு தங்கள் நிர்வாகம் பொறுப்பேற்று ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடும் ஆகவே அனைத்து வர்த்தகர்களும் அரசு விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஒரத்தநாடு வர்த்தக சங்கத் தலைவர் மணி சுரேஷ் குமார் துணை தலைவர் முகமது கனி மற்றும் நிர்வாகிகள் சீனி அசோகன் தமிழ்மணி உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.