தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே புலவஞ்சி ஊராட்சியில் தனிநபர் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்ததை அடுத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதனை அடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து கீழே இறங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது புலவஞ்சி ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் தனிநபர் ஒருவர் பாசன வாய்க்காலை ஒரு சில இடங்களில் அடைத்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அங்கு உள்ள வயல்களில் சில ஏக்கர்கள், மாயான குளம் மற்றும் வடிகால்கள் சரியாக சரி செய்ய முடியாமல் இருந்தது. இதனை அடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் மூலம் பாசன வாய்க்கலை சரி செய்தனர். இந்நிலையில் மீண்டும் பாசன வாய்க்கலை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து புலவஞ்சி ஊராட்சியை சேர்ந்த குப்புசாமி மகன் முருகேசன் (வயது 55)என்பவர் விவசாயி புலவஞ்சி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள 50 அடிக்கு மேல் உயரம் கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தபடி