• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விஜயை குற்றவாளியாக்க நினைப்பது அரசியல் – அண்ணாமலை..,

BySeenu

Oct 6, 2025

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய ஒரு மருந்து நிறுவனம், கோல்ட் ரெப் என்று சொல்லக் கூடிய மருந்தை தயாரித்து இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 குழந்தைகள் அந்த சிரப் குடித்ததன் மூலமாக உயிரிழந்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து இரு மாநில காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒரு எஸ்.ஐ.டி டீம் கூட காஞ்சிபுரத்திற்கு வந்து இருக்கிறார்கள். முதல் விஷயம் மருந்து கெட்டுப் போகவில்லை, அதில் யாரோ ஒரு தேவையில்லாத பொருளை உள்ளே கலந்து அது விஷமாக மாறி இருக்கிறது, என்பது முதல் தர அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இது கவனக்குறைவா? இல்லை வேண்டும் என்றே செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். ஐ.பி.சி இதை கவனிக்க வேண்டும்.. மற்ற அமைப்புகளும் இதை கவனிக்க வேண்டும்.. இந்த கலப்பு ஒரு குறிப்பிட்ட பேக்கில் மட்டும் செய்யப்பட்டதா, இல்லை மற்றவைகளும் கலந்து இருக்கிறதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அனைத்து மருந்துகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள் விசாரணை முடிவில் இது குறித்து தெரியவரும். கண்டிப்பாக இதில் தவறிழைத்தவர்கள் குறித்து விசாரணை எடுக்கப்பட வேண்டும். மத்திய பிரதேசத்தில் மருத்துவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.. மக்களுக்கு மருந்தின் மீது மரியாதை வர வேண்டும் என்றால் நிச்சயம் நடவடிக்கை தேவை என கூறினார்.

கரூர் விவகாரத்தில் நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்து குறித்த கேள்விக்கு,

இது ஒரு துரதிஷ்டவசமான ஒன்று தான், நீதிபதி இன்று காலை, சமூக வலைதளங்களில் வரக் கூடிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவை இல்லை என கூறி இருக்கிறார். நீதியரசர் பற்றி எப்பொழுதும் நாங்கள் குறை சொல்ல மாட்டோம். ஆனால் இந்த விஷயத்தில் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள், கடினமான தன்மை, ஒரு நீதிஅரசராக இருந்தாலும் கூட வார்த்தைக்காக ஒரு அர்த்தம் கம்பீரம் உண்டு. நீதியரசரின் குடும்பத்தை எல்லாம் இதில் இழுத்து இருக்கிறார்கள். நீதி அரசர் இவற்றையெல்லாம் தாண்டி மேலே இருக்கக் கூடியவர். நீதியரசர் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் மிகவும் சரியாக இருக்கிறதா என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இன்னும் யார் தவறு செய்தார்கள் என்பதை தெரியவில்லை. Bail பெட்டிஷனை நிராகரிப்பதற்கு உரிமை உள்ளது. நாம் சில கருத்துக்களை சொல்லும் பொழுது இன்வேஸ்டிகேஷன் என்குயரி இல்லாமல் யாராக இருந்தாலும் ஆழமான கருத்தை சொல்ல முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய கருத்துக்களை அரசியலாக வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள் என கூறினார்.

மக்களிடம் குழப்பத்தை கவர்னர் தான் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு,

இந்தியா முழுவதும் இன்று எதிர்க் கட்சியாக இருந்தாலும் கூட மத்திய அரசை பயன்படுத்தி அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் மத்திய அரசை எதிரியாக கருதி முதல்வர் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் செய்த தவறை மறைப்பதற்காக ராமநாதபுரத்தில் கட்ச தீவை பற்றி பேசுகிறார்கள். ஆளுநர் கேட்கக் கூடிய கேள்விகள் சரிதான். தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடும் என்றுதான் அவர் கேட்டு இருக்கிறார்.. இன்று அவர்கள் போராடி ஆளுநரை மாற்ற முடியுமா ஆளுநர் பொறுப்பே இல்லாமல் செய்துவிட முடியுமா??.. திராவிட முன்னேற்ற கழகம் வேண்டும் என்றே மக்களை தூண்டி விட்டு மக்களிடத்தில் போராட்டத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது ஒரு ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலையே இல்லை. ஆளும் கட்சி எல்லாவற்றையும் அனுசரித்து தான் செல்ல வேண்டும். கவர்னர் கேட்பதற்கு முதல்வர் மீண்டும் கவர்னரிடம் திசை திருப்புவது நாட்டிற்கு நல்லது அல்ல. முதல்வர் கவர்னரை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பது தமிழகத்திற்கு நல்லது அல்ல.

தமிழக வெற்றி கழகம், பா.ஜ.க இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா, தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக திருமாவளவன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விகளுக்கு,

கரூர் விஷயத்தை பொருத்தவரை விஜய் மீது வழக்கு போட்டு அக்யூஸ்ட் நம்பர் ஒன் என்ற பொழுது கேசே நிற்காது.. கொஞ்சமாவது சட்டம் தெரிந்து இருந்த யாராவது கூட இதைப்பற்றி சொல்லுவார்கள்..
ஹைட்ரபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுன் உபகாரத்தை எடுத்துக் கொள்ளலாம், அரசியல் ஆசைக்காக கைது செய்யலாம் ஒரு இரவு சிறையில் வைக்கலாம்.. அடுத்த நாள் வெளியில் வந்து விடுவார்கள்.. இன்று அரசு உறுதியாக இருக்கிறார்கள் என்றால் யார் மீது தவறு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் ஆரம்பித்து, தமிழக வெற்றி கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் யாராவது இருந்தாலும் கூட, தவறு செய்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். தமிழக வெற்றி கழகத்தின் மீது தவறுகள் இருக்கிறதா என்று என்னை கேட்டால் நிச்சயம் இருக்கிறது.. ஆனால் விஜய் அவர்களை குற்றவாளியாக மாற்ற நினைத்தால் அது முடியவே முடியாது. அரசியலுக்காக சிலர் இதை பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அதே போல திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர். நாளை திருமாவளவன் கட்சியில் இதேபோன்று நடந்திருந்தாலும், நான் திருமாவளவனுக்காக பேசுவேன். இதை யார் ஏற்பாடு செய்தார்களோ அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் கட்சியில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறுவதை அவர் கண் கூடாக பார்க்கிறார். அந்த எரிச்சலில் தான் திருமாவளவன் வெளியே வந்து திடீரென்று விஜய், மத்திய அரசு பத்தி பேசிக் கொண்டு இருக்கிறார். இரண்டாவது, பா.ஜ.க தமிழக வெற்றி கழகத்தையோ கட்சியையோ பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை. நியாயத்தை நியாயமாக பேசிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியால் நசுக்கப்படும் பொழுது நாங்கள் நிச்சயம் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வோம். தமிழக வெற்றி கழகத்தை இந்த விஷயத்தில் நசுக்க பார்ப்பதால் மட்டுமே நாங்கள் இதை பதிவு செய்கிறோம். அதனால் மட்டுமே நாங்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் அடைக்கலம் கொடுக்கிறோம் உடன் நிற்கிறோம். இவர்கள் போட்டு இருக்கும் எஃப் ஐ ஆர் மீதே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய ஒருவர் ஜென்சி ரெவல்யூசன் பற்றி பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்று தி.மு.க எப்படி ? சொல்ல உரிமை இருக்கிறது. அரசு தான் தமிழக வெற்றி கழகத்தினர் மீது எஃப் ஐ ஆர் பதிந்து இருக்கிறது. நீங்கள் பதிந்த எஃப் ஐ ஆர் மீதே நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களை கைகாட்டி நாங்கள் அடைக்கலம் கொடுப்பதாக கூறுவது அபத்தமானது என்று கூறினார்.

உங்களின் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறதே என்ற கேள்விக்கு,

நான் பல இடங்களில் சமீபத்தில் பதிவு செய்திருக்கிறேன், காவல் துறை இருக்கிறார்கள், கட்சியின் நபர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் நாம் ஒரு வித்தியாசமான கட்சியை சேர்ந்தவர்கள், நேத்து முதன் முதலாக காவல்துறைக்கு ஒரு புகார் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். இன்ஸ்பெக்டர் இடம் நான் தொலைபேசியில் பேசினேன். இதுகுறித்து யாராக இருந்தாலும் விடாமல் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறேன். இது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்த தொலைக்காட்சி நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பேரில் ஒருவர் கட்சியில் இருக்கிறார் அவரை நான் இதுவரை சந்தித்தது கூட கிடையாது. இது குறித்து வீடியோ பதிவு செய்தவர்களையும் நான் பார்த்தது கிடையாது. சம்பந்தப்பட்ட நபருக்கு இதனால் மன உளைச்சல் ஆக இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் ஏற்கனவே அவர்களின் அண்ணனை இழந்து விட்டு, இருக்கும் பணத்தில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் காவல்துறை இதை நிச்சயமாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

முதல்வர் கலந்து கொள்வது மகிழ்ச்சி தான், மத்திய அரசின் நிதின் கட்கரி அவர்கள் நேரடியாக செல்கிறார்கள். அதனால் நாங்கள் இதில் அரசியல் செய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசு நிறைய பணம் கொடுத்து இருக்கிறது என்பது மக்களுக்கு தெரிந்தால் போதும். அடிக்கல் நாட்டு விழாவை அமித்ஷா செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வராக இருந்தாலும் நம்முடைய முதல்வர் தானே மக்களின் பயன்பாட்டிற்கு தானே திறக்கிறார் பரவாயில்லை. முதல்வர் திறந்து வைப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். முதல்வர் இதை மக்களிடம் சொல்லும் போது மத்திய அரசு மாநில அரசும் இணைந்து இந்த பாலத்தை கொண்டு வந்திருப்பதாக கூற வேண்டும். தமிழ்நாட்டில் பெரிய பாலம் சவுத் இந்தியாவில் மூன்றாவது பெரிய பாலம், 10.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலம், கோவையில் உள்ள டிராபிக்கை இந்தப் பாலம் நீக்கும், இதை முதல்வர் மக்களிடம் சொன்னால் போதும் என கூறினார்.

கும்பமேளா மத்திய பிரதேஷ் போன்ற இடங்களில் காட்டாத அக்கறை மத்திய அரசு தமிழகத்தில் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு,

முதல்வர் ஸ்டாலின் இது குறித்து இராமநாதபுரத்தில் பேசினார், நீங்கள் கனிமொழியை இந்தியாவில் எங்கும் அனுப்பவில்லையா.. உத்தரப்பிரதேசத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பிக்கள் யாரும் போகவில்லையா??. கனிமொழி போகவில்லை என்று ஸ்டாலின் நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.. தமிழகத்தைச் சேர்ந்த எந்த எம்பிக்கள் சென்றாலும் சென்று பார்த்து விட்டு அவர்களுடைய கருத்தை சொல்லட்டும் என்று தான் மத்திய அரசு நினைத்தது.. முதல்வர் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் இருக்கும் பொழுது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்பி குழு எங்குமே செல்லவில்லையா?. நிச்சயம் சென்றார்கள். அதேபோல தான் தமிழகத்திற்கு இன்று என் டி ஏ குழு வந்து இருக்கிறது.. இந்தியாவில் ஆளும் கின்ற தேசிய ஜனநாயக கூட்டணி அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.. ஏன் உங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் எங்கும் சென்று எதையும் பார்வையிட வில்லையா?? ராகுல் காந்திக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா??.. அதே மணிப்பூருக்கு ராகுல் காந்தி போனதை ஏன் ஸ்டாலின் தவறு என கூறவில்லை.. யார் செல்வதற்கும் எங்கு செல்வதற்கும் உரிமை உள்ளது.. அதே மணிப்பூருக்கு கனிமொழி அக்கா சென்று இருக்கிற.. போவதற்கு திமுகவிற்கு உரிமை இருக்கிறது.. நிச்சயம் செல்லலாம் முதல்வராக இருக்கக் கூடிய ஸ்டாலின் பொறுப்பற்று பேசக் கூடாது என்று கூறுகிறேன் என கூறினார்.

பிரேமலதா இது திட்டமிட்ட சதி என கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,

நான் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, அஸ்ரா கார்க் நல்ல ஒரு நேர்மையான அதிகாரி. அவரின் தலைமையில் எஸ்ஐடி அமைக்கப்பட்டு உள்ளது. முழுமையான விசாரணை இதில் நடைபெற வேண்டும். நாங்கள் நிறைய கேள்விகள் வைத்து இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. எஸ் ஐ டி மீது நம்பிக்கை இருக்கிறது அவர்கள் முடிவு செய்யட்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் யார் வேண்டுமானாலும் எஸ் ஐ டி முடிவு வந்ததற்கு பிறகு சிபிஐ கேட்கலாம். அதனால் நமக்கு வாய்ப்பு இருக்கிறது பொறுமையாக இருக்கும் என கூறினார்.

அரசியல் கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு,

முதல்வர் சொன்னதை சொன்ன படி செய்ய வேண்டும்.. நீங்கள் உயர் நீதிமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சியும் அழைப்பதாக கூறினீர்கள் நிச்சயம் கூப்பிடுங்கள் எங்களுடைய தலைவரும் வருவார். பன்னிரண்டாம் தேதி எங்களுடைய மாநில தலைவர் மதுரையில் யாத்திரையை ஆரம்பிக்கிறார். தேசிய தலைவர் நட்டா மதுரைக்கு இதற்காக வரவிருக்கிறார். இதனால் அனுமதி வழங்குகிறார்களா இல்லையா என்பதில் குழப்பம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் 120 தொகுதியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் நாமக்கலில் நடத்துவதற்கு குழப்பம் நீடிக்கிறது. முதல்வரின் கடமை குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது. நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்காக ஆறு மாதங்கள் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. முதல்வர் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் அதன் பிறகு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். Sop வருவதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.

கரூர் விவகாரத்தில் அரசுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் நரித்தனத்தை காட்டுகிறார் எடப்பாடி என்ற விமர்சனத்திற்கு,

எதிர்க்கட்சி தலைவர், வந்தார்கள் பார்த்தார்கள் பேசினோம்.. இதில் விமர்சனங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. அண்ணன் தம்பி இடையில் சில கருத்துக்கள் அவ்வப் போது ஏற்று கூடிய ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருக்காது.. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. டிடிவி அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. என்னைப் பற்றியும் சில கருத்துக்கள் விமர்சனமாக வைக்கப்பட்டு இருக்கிறது அது அவருடைய கருத்தாக நான் பார்க்கின்றேன். இதில் எந்த தவறும் இல்லை.

பா.ஜ.க விற்குள் எது செய்தாலும் தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது அனைத்தும் கலந்து பேசியே முடிவு செய்யப்படும். நயினார் நாகேந்திரன் யாருக்கும் எதிராகவும் எதுவும் பேசவில்லை. எங்களுக்கு எதிரி திராவிட முன்னேற்றக் கழகம் தான். அரசியலில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் சரி செய்து முன்னே எடுத்துச் செல்வோம்.
எங்களுடைய கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எல்லோருக்குமே தி.மு.க வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக உள்ளது என்று கூறினார்.

அண்ணாமலை தற்போது அறிக்கை மட்டுமே கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்ற விமர்சனத்திற்கு,

தலைவர் பதவி இல்லாததால் வேலைப்பளு மிகவும் குறைந்து இருக்கிறது. சமுதாயப் பணியோடு அரசியல் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.