மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக மேடை அமைக்கப்பட்டது.

கோவிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் மேடைக்கு வந்திருந்து சிறப்பு அலங்காரம் நடந்தது. இதைத் தொடர்ந்து சடகோப பட்டர், ஸ்ரீ பாலாஜி பட்டர், ஸ்ரீதர் பட்டர், சௌமியா நாராயணன் பட்டர், வெங்கடேஷ் பட்டர், ராஜா பட்டார் உள்பட 12 பட்டர்கள் யாக பூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருமணம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தை வைத்து மாலை அணிவித்து தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி பூஜை நடத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, ,கோவில் பணியாளர்கள் , மணி, நித்யா,பிரகாஷ், ஜனார்த்தனன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர், மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். காடுபட்டி ஏட்டுகள் நாகூர்ஹனி, பெரிய மாயன் உட்பட போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.