விருதுநகர் அருகே ஆர் .ஆர். நகரில் இருந்து சிமெண்ட் மூடை ஏற்றிக்கொண்டு லாரி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சாத்தூர் பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்த ராகவன் என்பவர் ஓட்டி சென்றார்.

அந்த லாரி ஆர். ஆர். நகர் அருகே சர்வீஸ் சாலையில் இருந்து சாத்தூர் திருநெல்வேலி செல்லும் மெயின் ரோட்டில் ஏறிய போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் சிமெண்ட் லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சாலையின் தடுப்பில் மோதி நின்றது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து லாரிகளிலும் பஸ்சிலும் எதிர்பாராத விதமாக தீ பற்றியது.
சிறிது நேரத்தில் நான்கு வழிச்சாலையில் நின்ற இரண்டு வாகனத்திலும் தீ மள மளவென பற்றி எறிந்தது.

தீயில் சிக்கிய லாரி டிரைவர் ராகவன், ஆம்னி பஸ் டிரைவர் கணேசன், கிளீனர் மாதேஷ், ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்கள்..
இதனை அடுத்து அங்கிருந்து அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களில் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து விருதுநகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைக்கப்பட்டது.
ஆம்னி பஸ் முழுவதும் எறிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.
பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. நான்கு வழிச்சாலையில் விபத்து காரணமாக போக்குவரத்தும் பாதித்தது. விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.