விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் (மகளிர் இலவச பேருந்து) TN – 57, N- 1923 எண் கொண்ட அரசு பேருந்தில் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

மலைக்காலம் தொடங்கி இருப்பதால் மேற்கூறையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இன்று பெய்த மழைநீர் பஸ்சிற்குள் விழுந்ததால் பயணிகள் சீட்டுகளில் உட்கார முடியாமல் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்; பஸ்சில் பயணம் செய்த பயணிகள் வேறு வழி இன்றி நனைந்தபடி பயணம் செய்தனர்