சென்னைக்கு அடுத்த படியாக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மை நகரமாக கோவை உள்ளது..
தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் முக்கிய நகரமாக மாறி வரும் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை தொழில் சார்ந்த துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்..

இந்நிலையில் கடந்த வருடம் கோவை வந்த முதல்வர் , இந்தியாவின் முதல் தங்க நகை உற்பத்தி பூங்கா கோவையில் அமைக்க உள்ளதாக தெரிவித்த அவர்,இதனை செயல்படுத்த தமிழக அரசு சுமார் 126 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியிட்டார்..
இந்நிலையில் வரும் ஏழாம் தேதி குறிச்சி பகுதியிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் கோவை தங்க நகை தொழில் சார்ந்தோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..

இது குறித்து கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ரகுநாதன் சுப்பையா மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி,சசிக்குமார் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தங்க நகை உற்பத்தி சார்ந்த தங்க நகை பூங்காவில்,நகை பட்டறைகள், ஹால்மார்க் மையம், போன்ற வசதிகள் இருப்பதால் தங்க நகை தொழிலில் கோவை இந்திய அளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிவித்த அவர் இதனால் மாநிலத்திற்கு அதிக வரி வருவாய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்…
மேலும் தொழிற்பூங்காவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு அரசு சார்பாக தனி முத்திரை பதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்..