சென்னையிலிருந்து 12:40 மணிக்கு மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் இன்னும் 45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது.
இந்த விமானத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் அருகே வந்த இண்டிகோ விமானம் மதியம் 1:45 மணிக்கு வந்தது மதுரை விமான நிலைய ஓடுதள பாதைக்கு வந்த விமானம் அதிகமான வெப்பநிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே சென்றது.

மீண்டும் 10 நிமிடம் வானத்தில் வட்டமடித்த இண்டிகோ விமானம் சரியாக 1:58 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இது குறித்து விமான பைலட் வெப்பநிலை காரணமாக மீண்டும் மேலே செல்வதாகவும் சிறிது நேரத்தில் இறங்கி விடுவோம் எனவும் தெரிவித்ததாக இண்டிகோ பயணி தெரிவித்தார்.