தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட 2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 57 நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்த அறிக்கையில் :

காந்தி ஜெயந்தி முன்னிட்டு குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர அடிப்படையில் காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் நகர உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவலர்கள் கொண்ட குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் பலோபந்தவானம் சிஆர்சி பஸ் டெப்போ அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த நபர்களான கீழவாசலைச் சேர்ந்த ரமேஷ் 29, மற்றும் பலோபந்த வானத்தைச் சேர்ந்த சத்யராஜ் 40, கீழவாசலைச் சேர்ந்த ஜெய்சங்கர் 52, திருவையாறு சேர்ந்த குமார் 48, மற்றும் என்கே ரோட்டை சேர்ந்த காளீஸ்வரன் 44, ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 78 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அதே போன்று வல்லம் உட்கோட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலும் படி வல்ல முற்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவலர்கள் கொண்ட குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர்களான திருவையாறு சேர்ந்த குமரேசன் 33, ஆளக்கூடியசேர்ந்த மணிகண்டன் 33, பிள்ளையார்பட்டி சேர்ந்த அலெக்சாண்டர் 37, மதன் 30, குறுங்குளத்தை சேர்ந்த ஆனந்த் 30, ஆகியோரே கைது செய்து அவர்களிடமிருந்து 280 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரத்தநாடு உட்கோட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த குற்றவாளிகளான நெய்வாளசலைச் சேர்ந்த மகாதேவன் 55, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி 56, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபாபு 46, ஒரத்தநாட்டைச் சேர்ந்த சேகர் 35, அம்பலக்காரர் தெருவை சேர்ந்த சந்திரன் 55, மற்றும் நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் 53, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை உட்கோட்டம் பேராவூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் மதுபான கடையின் 7874 அருகில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றவாளிகளான விவேக் என்கிற வீரக்குமார் 26, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 730 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

மேலும் திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வகோட்டை சாலையில் உள்ள மதுபான கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ரகசிய தகவலின் படி துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குலிவிரனார் தீவிர சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான கடை எண் 80 38 பின்புறம் மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரான திருவையாறு சேர்ந்த ரஞ்சித் குமார் 24, என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 384 மது பாட்டில்கள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபநாசம் உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஆன காவலர்கள் அடங்கிய குழுவினார் சட்டவிரோதமாக மதுபாட்டுகளில் விற்பனை செய்த குற்றவாளியான பாபநாசத்தைச் சேர்ந்த தேவேந்திரன் 22, புருஷோத்தமன் 43 ராஜகிரி சேர்ந்த தாமு 72, பாபநாசத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் 50, சிவசாமி 66 மற்றும் காமராஜ் 40, ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து பட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போன்று கும்பகோணம் உட்கோட்ட காவல்கன் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த குற்றவாளிகளான வலங்கைமானை சேர்ந்த மகேந்திரன் 35, என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோன்று திருவிடைமருதூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸாரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான சூரிய நாராயண திருவை சேர்ந்த பரணி 22, தலையாரி தெருவை சேர்ந்த பாலாஜி 35, கல்யாணபுரத்தைச் சேர்ந்த செல்வமணி 43, மற்றும் ஆவணி புரத்தைச் சேர்ந்த ஹாஜி முகமது 54 , மற்றும் புளியம்பட்டி சேர்ந்த வெங்கடேசன் 41, மற்றும் திருபுவனத்தைச் சேர்ந்த சித்தான் 44, ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதம் பாட்டிலில் விற்பனை செய்த நபர்களான மெலடூரைச் சேர்ந்த முருகதாஸ் 55, ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஐயப்பன் 51, மற்றும் தோப்பு தெருவை சேர்ந்த ரவி 53, ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.