• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழா..,

தஞ்சாவூர் கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மாவட்ட கலெக்டர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையினை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது:

2025 2026 ஆம் ஆண்டிற்கு இம்மாவட்த்திற்கு 116.50 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள். பாலியஸ்டர் ரகங்கள் உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் காட்டன் மெத்தை விரிப்புகள் இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து கதர், பாலியஸ்டர் பட்டு இரகங்களுக்கு 30% மற்றும் உல்லன் இரகங்களுக்கு 20% அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத்துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் முறையில் கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தாங்கள் தங்கள் ஆதரவினை தொர்ந்து நல்கி தமிழகத்திலுள்ள நூற்பாளர்கள், நெசவாளர்கள் வாழ்க்கையில் ஒளிவீச உதவிடுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, கதர் அங்காடி மேலாளர் நடராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.