மதுரை மாவட்டம் பசுமையாளர்கள் குழு சார்பாக மறைந்த முத்துப்பட்டியை சேர்ந்த பசுமை ஆர்வலர் ஜெகதீஷ் நினைவாக 30 நாட்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2ம் நாள் நிகழ்வாக யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் ஜெகதீஷ் நினைவாக வேப்ப மரக்கன்று ஒத்தக்கடை அழகப்பன் நகரில் நடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலியில் தலைமை ஆசிரியர் தென்னவன், பிரபு, ராகேஷ், பாலமுருகன், ஜெயபாலன், பத்மநாபன், சேகர் மற்றும் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.