திண்டுக்கல் அருகே பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை சென்னை சேர்ந்த பயணி சரவணன் என்பவர் தாக்கியதில் , அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் பார்த்திபன் ஆகியோர் காயமடைந்தனர் .

இதுகுறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் சரவணன் மீது புகார் அளித்துள்ளனர். எங்கள் பணிக்கு பாதுகாப்பு இல்லை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.