கரூரில் அரசியல் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் இந்தியாவில் வேறு எங்கும் நடக்க கூடாது. எந்த அரசியல் கட்சியாக இருந்ததாலும் இந்த சம்பவம் ஒரு பாடம். பொது மக்களின் விலை மதிப்பு இல்லாத உயிர் இழந்து இருக்கிறோம்.

இது போன்ற சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நடக்க கூடாது. கோட்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்பது தான் இது முடிவாகும். ஒரு நபர் விசாரணை கமிஷனை அரசு அறிவித்து உள்ளது. த.மா.கா. உள்பட பல கட்சிகள் சிபிஐ விசாரணையை கேட்கிறது. முதல் தகவல் அறிக்கையில் எந்த வித தகவலும் இல்லாத நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. இனியும் நடக்காமல் இருக்க வேண்டிய கோட்பாடுகள் தான் தேவை. எப்படி நடந்தது என்பது விசாரணையில் உண்மை நிலை வெளி வரவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
துயர, சோகமான சம்பவம். யாரும் எதிர்ப்பார்க்காமல் நடந்த சம்பவம்.
வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள், சகோதர, சகோதரிகள் இழந்ததாக தான் பார்க்கிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தில் பெரிய, சிறிய கட்சிகள் கூட்டம் நடத்தும் போது வருகின்ற மக்கள், தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது கடமை.
பிரதமர் நேரடியாக வர முடியாததால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியான வேதனையால் மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், எல்.முருகன் ஆகியோரை அனுப்பி வைத்து ஆறுதல் கூற செய்தார்.
மத்திய பா.ஜ.க. அரசு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க 8 பேர் கொண்ட குழுவை அனுப்பி முதல் நிலையில் என்ன நடந்தது. எப்படி நடந்தது என்பதை ஆய்வு செய்து முடிவை தேசிய ஜனநாயக கட்சி தலைவரிடம் தருவார்கள்.
கூட்டங்கள் சின்னதாகவோ பெரியதாகவோ இருந்ததாலும் வருங்காலங்களில் பாதுகாப்பு தான் முதல் நிலையில் இருக்கும். தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு தான் கோட்பாடாக இருக்க முடியும்.
இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் நடக்கும் போது நமக்காகவரும் பொது மக்கள், தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளும் காவல் துறையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..