தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்தும் வளர்ச்சி குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த நிலையில் மத்திய அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் முடிந்து வெளியே வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பின தங்க தமிழ்ச்செல்வனை தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையிலான பாஜகவினர் முற்றுகையிட்டு மத்திய அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்காக கிராமப்புறங்களில் குழாய்கள் எதுவும் பதிக்கப்படவில்லை என்றும் பதிக்கப்பட்டு இருந்த குழாய்களும் அகற்றப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

அரசு அதிகாரிகள் உதவியுடன் ஒப்பந்ததாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக பாஜகவினர் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து கேட்டறிந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் இது குறித்து ஆய்வு செய்து 20 நாட்களில் தனக்கு அறிக்கை தரும்படி கேட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டங்கள் நடைபெற்று இருக்கும் முறை கேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் உறுதி அளித்ததை அடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர் இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)