திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நாய் கடி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி கங்காதரன்(69) என்பவர்
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில் பலத்த காயம் அடைந்த கங்காதரன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 5 நாட்களில் 8-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன.
நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கோடி கழிவுகள் உட்பட பல கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கடை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நாய்களுக்கு கு.க. செய்து எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர்.