சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த சம்பவத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் ஒரு வதந்தியை பரப்பிய நிலையில் அது ஒரு சில தொலைக்காட்சியில் வெளியாகின.
தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு இருக்கிறதா இல்லையா என
கேட்டு அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன நாங்கள் கடை அடைப்பு இல்லை என தெரிவித்தோம்

அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் ஆங்காங்கே காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் நீங்கள் இன்றைக்கு கடையடைப்பு நடத்தவில்லை என கேட்கும் பொழுது இந்த விபத்து தொடர்பாக ஏதோ ஒரு சக்தியை செயல்படுகிறது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெரிந்து கொள்ள முடிகிறது
இதன் உண்மையான நிகழ்வை மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக தமிழ்நாடு அரசு இதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் லாரி முனையம் கட்டியுள்ளார்கள் அதை அரசியல் சார்ந்த ஒரு வணிகர் சங்கத்திற்கு அதன் நிர்வாகிக்கும் பொறுப்பையும் அந்த சங்கத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருநெல்வேலி மாநகருக்குள் லாரிகள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
லாரிகளில் வரக்கூடிய சரக்கை லாரி முனியங்களில் இறக்கி வேறொரு வாகனங்களில் ஏற்றி மாநகருக்குள் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள் இதனால் லாரி வாடகை ஏற்றக் கூலி இருக்கக்கூடிய கூலியால் விலைவாசி உயருமே தவிர குறையாது.
ஒரு ஏரியாவில் போக்குவரத்து நெரிசல் இருந்தால் நேரத்தை மாற்றி அமைக்கலாமே தவிர ஒரேடியாக வாகனங்கள் வரக்கூடாது என முறையாக இருக்காது.
எதன் காரணமாக காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் கடைகளை
மூட சொல்லுகிறார்கள் என தெரியவில்லை இந்த விபத்தை பெரிதாக பூதாகர படுத்தி காட்டவேணும் என்பதற்காக பண்ணுகிறார்களா என்று தெரிவதில்லை.
தமிழக அரசு அவர்களாகவே முன்வந்து இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு பின் ஏதோ சதி இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் மக்களுடைய கருத்தை வைத்து நான் சொல்கிறேன்.
பொது மக்களுக்கு பாதிப்பு என்றால் அது வணிகர்களாகிய எங்களுக்கும் பாதிப்பு தான் எங்களுக்கு எஜமானர்களே பொதுமக்கள் தானே பொதுமக்களுக்கும் ஒரு பாதிப்பு என்றால் கண்டிப்பாக அது எங்களுக்கும் பாதிப்பு தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்துவார்கள் அது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் பாதிப்பு இருக்கும் அதனால் எங்களுக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை.
விஜய் கட்சியை நிர்வாகிப்பதற்கு சீனியர் தலைவர்களின் ஆலோசனைப்படி நடைபெற வேண்டும் அனைவரும் ரசிகர்கள் வாலிபர்கள் அவர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது என கூறினார்.