• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இதயத்தை கவனமாக பேணி காக்க வேண்டும்..,

ByM.S.karthik

Sep 29, 2025

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் .கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் இருதயவியல் துறை சார்பாக இருதயத்தை கவனமாக பேணி காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மருத்துவ கல்லூரி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் இருதயத்தை கவனமாக பேணி காக்க வேண்டும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் டீன் அருள் சுந்தரேஸ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜீ தமிழ் புகழ் தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவடையப்பன் கலந்து கொண்டு இதயம் காப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நோயாளிகள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து இருதயவியல் துறையில் சிறப்பாக சேவை புரிந்த மேலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயந்தி, மருத்துவ கல்லூரியில் எம்டி பட்டப்படிப்பில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி இருதயவேல் துறை அசோசியேட் ப்ரோபோசர் சரவணன் மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல் கல்லூரி துணை முதல்வர் மல்லிகா ஆர்எம்ஓ’s சரவணன்,முரளிதரன் உதவி பேராசிரியர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருதயவியல் துறை தலைவர் செல்வராணி தலைமையில் துறை பேராசிரியர்கள் மாணவர்கள் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.