கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக பெண்கள் 18 பேர், ஆண்கள் 13, சிறுமிகள் 5, சிறுவர்கள் 5 என பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 34 நபர்களும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா 2 நபர்களும் சேலத்தை சேர்ந்த 1 நபரும் என இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.